முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்காக விஜயகாந்த் 18 நாள் பிரச்சாரம்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.26 - அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 18 நாள் பிரச்சார சுற்றுப் பயணம் செயய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 25 ம் தேதி செஞ்சி, மேல்மலையனூர், நாட்டார்மங்கலம், திண்டிவனம், மதுராந்தகம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூரிலும், 26 ம் தேதி தச்சூர் கூட்ரோடு, செங்குன்றம், பாடி சந்திப்பு, கொளத்தூர், எழும்பூர், அண்ணாநகர், விருகம்பாக்கத்திலும், 27 ம் தேதி கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூண்டி, திருத்தணி, ஆர்.கே. பேட்டை, சோளிங்கர், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூரிலும், 28 ம் தேதி அணைக்கட்டு, விருபாட்சிபுரம், கண்ணமங்கலம், ஆரணி, போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலையிலும், 29 ம் தேதி தண்டாரம்பட்டு, செங்கம், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பணஹள்ளி, சூளகிரி, பேரிக்கை மற்றும் ஓசூரிலும், 30 ம் தேதி காரிமங்கலம், தர்மபுரி, நல்லம்பள்ளி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், சூரமங்கலம், சேலம், பால்மார்க்கெட், கோரிமேடு, பட்டை கோவிலிலும், 31 ம் தேதி வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், பெரம்பலூர், குன்னம், செந்துறை, அரியலூர், புள்ளம்பாடி, லால்குடியிலும், அடுத்த மாதம் 1 ம் தேதி சமயபுரம் டோல்கேட், திருவானைக்காவல், கல்காண்டார் கோட்டை, திருவெறும்பூர், முசிறி, எருமைப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், கருங்கல்பாளையம், சூரம்பட்டி நால்சாலை, வீரப்பன் சத்திரத்திலும், 2 ம் தேதி சித்தோடு, பெருந்துறை, பெருமாநல்லூர், அவினாசி, சூலூர், நால்ரோடு, சுல்தான்பேட்டை, உடுமலை, மடத்துக்குளம், பழனியிலும், 3 ம் தேதி ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், சின்னாளபட்டி, பெரியகுளம், பழனி செட்டியபட்டி, சின்னமனூர், கம்பத்திலும், 4 ம் தேதி ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, நாகமலைபுதுக்கோட்டை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர்,சூலக்கரையிலும், 5 ம் தேதி சாத்தூர், கோவில்பட்டி, வள்ளியூர், பனகுடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆரல்வாய்மொழி, நாகர்கோவில், தக்கலை, குலசேகரத்திலும், 6 ம் தேதி ஆர்.எஸ்.மங்களம், திருவாடானை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை, மதுக்கூரிலும், 7 ம் தேதி மன்னார்குடி, திரவாரூர், நன்னிலம், மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணத்திலும், 8 ம் தேதி திட்டக்குடி, தொழுதூர், நல்லூர், விருத்தாச்சலம், வடலூர், இந்திராநகர், பண்ருட்டி, புதுப்பேட்டையிலும், 9, 10,11 ஆகிய தேதிகளில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக மார்ச் 25 ம் தேதி முதல் ஏப்ரல் 11 ம் தேதி வை 18 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்