முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் பனிச்சரிவில் சிக்கி பாக். வீரர்கள் 135 பேர் பலி

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப். - 9 - இந்திய எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் சியாச்சின் பகுதியில் ராணுவ முகாம் மீது கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் முகாமில் இருந்த கர்னல் உள்ளிட்ட 135 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் புதைந்தனர்.  காரகோரம் மலை பகுதியில் அமைந்துள்ள முக்கியமான ராணுவ முகாம் மீது காலை 6 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நிகழ்ந்ததுமே அந்நாட்டு ராணுவ உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பனிச்சரிவில் புதைந்திருந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதுவரை பெரும்பாலான பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு விட்டன. மீட்பு பணியில் ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்கள் ஈடுபட்டுள்ளதாக ராணுவ தலைமையக செய்தி தொடர்பாளர் அதர் அப்பாஸ் தெரிவித்தார். இந்த பனிச்சரிவு மோசமானது. இதில் சிக்கியவர்களின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இருப்பினும் அவர்கள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை ராணுவ வீரர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

மருத்துவ ஊழியர்களும் ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த சம்பவம் துயரமானது என்றும் அப்பாஸ் தெரிவித்தார். உலகின் மிக உயரமான பனிச்சிகரம் சியாச்சின் பனிச்சிகரம். இங்கு கடுமையான குளிர் காணப்படும். சண்டையினால் உயிரிழக்கும் ராணுவ வீரர்களை விட குளிரினிலேயே அதிக வீரர்கள் உயிரிழக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்