முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அதிபரை வரவேற்றது வெட்கக்கேடானது

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

பஹ்ரைச்( உ.பி.)ஏப்.11 - இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை வரவேற்றது வெட்கக்கேடானது என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார். ஆஜ்மீர் தர்காவில் தொழுகை நடத்துவதற்காக பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி இந்தியா வந்தார். அது அவரது தனிப்பட்ட பயணமாகும். அப்படி இருந்தும் டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். அதோடுமட்டுமல்லாது ஜர்தாரியுடன் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின்பு விருந்தும் கொடுத்து உபசரித்தார். இதை அமெரிக்கா பாராட்டி வரவேற்றுள்ளது. ஆனால் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் இதை கடுமையாக எதிர்த்து உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய காரணமாக விளங்கிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசானது இந்தியாவுக்கு இன்னும் நாடு கடத்தாமல் இருக்கிறது. அதோடுமட்டுமல்லாது பாகிஸ்தானில் சுதந்திரமாக சயீது இருக்கிறான். அப்படிப்பட்ட நிலையில் ஜர்தாரியை மத்திய சார்பாக வரவேற்றது வெட்கக்கேடான விஷயமாகும் என்ற தொகாடியா கூறியுள்ளார் ஹபீஷ் விஷயம் ராஜதந்திர ரீதியான விஷயமாகும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. அப்படி இருந்தும்  ஹபீஷை நாடு கடத்த பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்று பஹ்ரைச்சில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தொகாடியா கூறினார். இந்தியா வந்த ஜர்தாரியை சந்தித்து பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எடுத்துக்கூற அனுமதி கேட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினேன். ஆனால் எனக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் தொகாடியா குற்றஞ்சாட்டினார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லீம் பெண்களுக்கு தலை ரூ.30 ஆயிரம் அளிக்கப்படும் என்று சமாஜ்வாடி கட்சி அரசு அறிவித்திருப்பது ஓட்டுவங்கி அரசியலாகும். கங்கை நதி சுத்தம் செய்யக்கோரி அனைத்து போராட்டங்களுக்கும் விஸ்வ இந்து பரிஷத் ஆதரவு கொடுக்கும் என்றும் தொகாடியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்