முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு யாரும் சவால் விட முடியாது: ராஜபக்சே

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஏப். 11 - மனித உரிமை தொடர்பாக சிங்கள கலாச்சாரத்தோடு யாரும் சவால் விட முடியாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற மத்திய வங்கிகளின் ஆண்டறிக்கை வெளியீட்டு விழாவில் ராஜபக்சே பேசியதாவது, பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை அடிமட்ட மக்களும் அனுபவிக்க வழிவகை செய்வதே எனது அரசாங்கத்தின் குறிக்கோள். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வாக்குறுதியை நிறைவேற்றியது போல ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை அமைக்கும் வாக்குறுதியையும் கைவிட முடியாது. 

8 சதவீத பொருளாதார வளர்ச்சி இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் முறையாக எட்டியுள்ளது. நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட மறுமலர்ச்சியே இது. உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவை கண்டு வருகின்றன. ஆனால் இலங்கை பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்ததினால் இத்தகைய பலனை அடைய முடிந்தது. 

பயங்கரவாதம் இங்கே ஒழிக்கப்பட்டாலும் கூட அதன் பின்னணியில் இயங்கிய சக்திகள் சர்வதேச ரீதியில் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். 30 ஆண்டு கால பிரச்சினையை ஒரே இரவில் முடிவு செய்ய முடியாது. இதற்கான தீர்வை இறக்குமதியும் செய்ய முடியாது. வெளிநாட்டு தீர்வுகள் பற்றி நமக்கு தெரியும். வெளிநாட்டு தீர்வுகளுக்கு ஆயுள் மிக குறைவு. அவை தற்காலிகமானவை. பல நாடுகள் அதற்கு உதாரணமாக உள்ளன. மற்ற நாடுகளை விட மனித உரிமையை பேணுவதில் இலங்கை முன்னிலையில் உள்ளது. இதில் யாரும் எங்களுக்கு சவால் விட முடியாது என்றார் ராஜபக்சே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்