முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராஜா-கூடடாளிகள் மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.29 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இந்த வாரத்தில் சி.பி.ஐ. முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஏலம் விடப்பட்டத்தில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து விசாரித்து, வருகின்ற 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த ஊழல் குற்றச்சாட்டு விசாரணையையும் சுப்ரீம்கோர்ட்டு கவனித்து வந்தது. இதனையொட்டி சி.பி.ஐ. விசாரணையை துரிதப்படுத்தியது. பிரபல அரசியல் தரகர் நீரா ராடியா, அவரது தொலைபேசி மற்றும் செல்போன் உரையாடல்  ,மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராஜா, அவரது தனி செயலாளரும் கூட்டாளியுமான சந்தோலியா, மற்றொரு கூட்டாளி சாதிக் பாட்ஷா ( இவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது) தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹூரா, சுவான் கம்பெனி முன்னாள் நிர்வாக அதிகாரி ஷஹித் பல்வா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் கனிமொழி, தயாளு அம்மாளை தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது கூறியவற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் பதவி செய்துள்ளனர். 

இந்தநிலையில் வருகின்ற 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் முதல் குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தயார் செய்து விட்டதாகவும் இந்த வாரத்தில் அதாவது இன்னும் ஒரு சில நாட்களில் அந்த குற்றப்பத்திரிகை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குற்றப்பத்திரிகையில் ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனியும் யுனிடெக் நிறுவனமும் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.யுனிடெக் நிறுவனம் மூலம்தான் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறியதாக கூறப்படுகிறது.  இந்த வழக்கில் பல கம்பெனிகள் மட்டுமல்லாது மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இரண்டாவது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் கணக்கிடாததால் முதல் குற்றப்பத்திரிகையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் எவ்வளவு இழப்பு என்பது முதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படமாட்டாது என்று தெரிகிறது. கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பதை டிராய் கணக்கிட்டு வருகிறது. கணக்கெடுப்பில் எவ்வளவு இழப்பு என்பதை டிராய் தெரிவித்த பின்பு அதை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. சேர்க்கும் என்று தெரிகிறது.  ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலும் அடிமாட்டு விலையில் ஏலம் விட்டதிலும் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்