முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

குன்ஹூவாங்டாவ், மே. - 20 - லண்டன் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பெண்கள் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் 51 கிலோ, 60 கிலோ, 75 கிலோ ஆகிய மூன்று எடை பிரிவு இடம் பெறுகிறது.  ஒலிம்பிக் தகுதிக்கான பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குன்ஹூவாங்டாவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் உலகின் 2-ம் நிலை வீராங்கனை நிகோலா ஆடம்சிடம் (இங்கிலாந்து) 13-11 என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்ட 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் அதிர்ஷ்ட வாய்ப்பில் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான 29 வயது மேரிகோம் கூறுகையில், கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் இடம் கிடைத்து விட்டது. எனவே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உலக போட்டியில் பதக்கம் இல்லாமல் முதல்முறையாக திரும்புவது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 81 கிலோவுக்கு மேற்பட்ட உடல் எடைப்பிரிவில் கால் இறுதியில் இந்திய வீராங்கனை கவிதா சகால் 15-14 என்ற புள்ளி கணக்கில் துருக்கி வீராங்கனை செம்சி யாராலியை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்