முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா ரைடர்ஸ் 34 ரன் வித்தியாசத்தில் புனேவாரியர்ஸ் வீழ்த்தியது

திங்கட்கிழமை, 21 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

புனே, மே. - 21 - 5 -வது ஐ.பி.எல். போட்டியில் புனேயி ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன் வித் தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், ஷாகிப் அல் ஹசன் மற்றும் துவக்க வீரர் பிரண்டன் மெக்கு ல்லம் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக யூசு ப் பதான் மற்றும் காம்பீர் இருவரும் ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, யூசுப் பதான் மற்றும் ஷாகிப் அல் ஹசன் இருவரும்  நன்கு பந்து வீசி தலா 2 விக் கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதர வாக சுனில் நரைன், இக்பால் அப்துல் லா, எல். பாலாஜி மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் பந்து வீசினர். ஐ.பி.எல். போட்டியின் 70 -வது லீக் ஆட்டம் புனே நகரில் உள்ள சுப்ரட்டா ராய் அரங்கத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கேப்டன் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புனேயின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடி ரன்னை எடுத்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 136 ரன் னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். புனே அணி தரப்பில் பர்னெல் 18 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மைக்கேல் கிளார்க் மற்றும் பி. குமார் இருவரும் தலா 1 விக்கெட் எடு த்தனர்.  புனே அணி 137 ரன்னை எடுத்தால் வெ ற்றி பெறலாம் என்ற இலக்கை கொல் கத்தா அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெ ட் இழப்பிற்கு 102 ரன்னை மட்டும் எடு த்தது. இதனால் கொல்கத்தா அணி இந்த லீக் போட்டியில் 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

புனே அணி தரப்பில் 1 வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. ஜெஸ்சே ரை டர் அதிகபட்சமாக, 24 பந்தில் 22 ரன் னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி அட க்கம். தவிர, மைக்கேல் கிளார்க் 13 ரன் னையும், மஜும்தார் 17 ரன்னையும், பெர்குசன் 12 ரன்னையும், எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில், யூசுப் பதான் 12 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, எல். பாலாஜி. இக்பால் அப்துல்லா, ஆர். பாட்டியா  மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஷாகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்