முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி

வியாழக்கிழமை, 24 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

புனே, மே. 24 - 5 -வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியி ல் புனேயில் நடைபெற்ற முதல் பிளே ஆப் (தகுதிச் சுற்று)போட்டியில் கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன் வித் தியாசத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், யூசுப் பதான், மெக்குல் லம், காம்பீர், மற்றும் காலிஸ் ஆகி யோர் அதிரடியாக ஆடி கால் சதம் அடி த்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த னர். அவர்களுக்கு பக்கபலமாக சுக்லா ஆடினார். 

பின்பு பெளலிங்கின் போது, காலிஸ் மற்றும் சுனில் நரைன் இருவரும் நன்கு பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக எல். பாலாஜி, ஷாகிப் அல் ஹசன், இக்பால் அப்துல் லா மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் பந்து வீசினர். 

ஐ.பி.எல். போட்டியின் முதல் பிளே ஆப் சுற்று புனே நகரில் உள்ள சுப்ரட்டா ராய் சகாரா அரங்கத்தில் நடந்தது. இதில் கேப்டன் சேவாக் தலைமையி லான டெல்லி டேர்டெவில்ஸ் அணியு ம், கேப்டன் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி டெல்லியின் பந்து வீச்சை சமாளித்து ஆடி கெளரவ மான ஸ்கோரை எடுத்தது. அந்த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 4 வீரர்க ள் கால் சதம் அடித்தனர். 

அதிரடி வீரரான யூசுப் பதான் கடைசி கட்டத்தில் அபாரமாக பேட்டிங் செய்தார். அவர் 21 பந்தில் 40 ரன்னை எடுத் து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

துவக்க வீரர் மெக்குல்லம் 36 பந்தில் 31 ரன்னையும், காம்பீர் 16 பந்தில் 32 ரன் னையும், காலிஸ் 33 பந்தில் 30 ரன்னையும், எல்.ஆர். சுக்லா 11 பந்தில் 24 ரன் னையும் எடுத்தனர். 

டெல்லி அணி சார்பில், இர்பான் பதா ன் 20 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, உமேஷ் யாதவ் மற்று ம் நெகி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

டெல்லி அணி 163 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை கொ ல்கத்தா அணி வைத்தது. ஆனால் அடு த்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவ ரில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்னை எடுத்தது. 

இதனால் கொல்கத்தா அணி இந்த முத ல் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அன்த அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி முதன் முறையாக ஐ.பி.எல். போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 

டெல்லி அணி தரப்பில், ஜெயவர்த்த னே மற்றும் என். ஓஜா தவிர மற்ற வீரர் கள் நிலைத்து நின்று ஆட வில்லை. இதுவே அந்த அணியின் தோல்விக்கு காரமணமாக அமைந்தது. 

இலங்கை அணியின் கேப்டனான ஜெ யவர்த்தனே அதிகபட்சமாக, 33 பந்தில் 40 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்ட ரி அடக்கம். என். ஓஜா 28 பந்தில் 28 ரன் னை எடுத்தார். தவிர, சேவாக் 10 ரன் னையும், வேணுகோபால் ராவ் 13 ரன் னையும், பி. நெகி 14 ரன்னையும், டெ ய்லர் 11 ரன்னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி சார்பில், காலிஸ் மற்றும் சுனில் நரைன் இருவரும் தலா 24 ரன்னைக் கொடுத்து தலா 2 விக்கெ ட் எடுத்தனர். தவிர, எல். பாலாஜி, ஷாகிப் அல் ஹசன், இக்பால் அப்துல் லா மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக யூசுப் பதான் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்