முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 5: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்

திங்கட்கிழமை, 28 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 29 -  5 - வது ஐ.பி.எல். போட்டியில் சென் னையில் நடந்த பரபரப்பான இறுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத் தில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் கெளதம் காம்பீர் தலைமையி லான கொல்கத்தா அணி முதன் முறை யாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இறு திச் சுற்றில் நடப்பு சாம்பியனை தோற் கடித்து பட்டைத்தையும் வென்று சாத னை புரிந்துள்ளது. 

இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி தரப்பில், துவக்க வீரர் பிஸ்லா மற்றும் காலிஸ் இருவரும் அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக ஷாகிப் அல் ஹசன் மற்றும் எம்.கே. திவாரி இருவரும் ஆடினர். 

சேப்பாக்கத்தில் நடந்த இறுதிச் சுற்றில் இரு அணிகளின் பந்து வீச்சும் எடுபட வில்லை. அதிகமாக விக்கெட்டுகள் விழவில்லை. கொல்கத்தா சார்பில், ஷாகிப் அல் ஹசன், காலிஸ் மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் தலா 1 விக் கெட் எடுத்தனர். 

ஐ.பி.எல். போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடந்தது. இதில் கேப்டன் தோனி தலை மையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் காம்பீர் தலைமை யிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நன்கு ஆடி பிர மாண்டமான ஸ்கோரை எடுத்தது. அந் த அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்னை எடுத்தது. 

இதில் ரெய்னா அதிகபட்சமாக 38 பந்தி ல் 73 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். மைக் ஹஸ்சே 43 பந்தில் 54 ரன்னை எடுத்தா ர். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, எம். விஜய் 32 பந்தில் 42 ரன்னையும், கேப்டன் தோனி 14 ரன் னையும் எடுத்தனர். 

கொல்கத்தா அணி தரப்பில், ஷாகிப் அல் ஹசன் 25 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, காலிஸ் மற் றும் ஆர். பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

கொல்கத்தா அணி 191 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற சவாலா  ன இலக்கை சென்னை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்னை எடுத்தது. 

இதனால் பரபரப்பாக நடந்த இந்த இறு திச் சுற்றில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐ.பி.எல். கோப்பையை முதன் முறை யாக கைப்பற்றி சாதனை படைத்தது.

கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீர ர் பிஸ்லா யாரும் எதிர்பார்க்காத வகை யில் அபாரமாக பேட்டிங் செய்து 48 பந்தில் 89 ரன்னை எடுத்தார். இதில் 8 பவு ண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். 

அவருக்கு பக்கபலமாக ஆடிய காலிஸ் 49 பந்தில் 69 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, ஷாகிப் அல் ஹசன் 11 ரன்னையு ம், எம்.கே. திவாரி 9 ரன்னையும் எடுத் தனர். 

சென்னை அணி சார்பில் ஹில்பென் ஹாஸ் 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார்கெல், அஸ்வி ன் மற்றும் டி. பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பிஸ் லாவும், தொடர் நாயகனாக சுனில் நரீனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்