முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு கரன்சி வைத்திருந்து கோவா அமைச்சர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை, ஏப்.3 - வெளிநாட்டு மற்றும் இந்திய கரன்சி நோட்டுகளுடன் வந்த கோவா கல்வித்துறை அமைச்சரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

கோவா கல்வித்துறை அமைச்சராக இருப்பவர்  அண்டாசியோ மான்சரேட். இவர் நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அவரது லக்கேஜுகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது  அளவுக்கு அதிகமாக வெளிநாட்டு மற்றும் இந்திய கரன்சி நோட்டுக்களை வைத்திருந்ததாக கூறி அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அமெரிக்க டாலர் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக அவர் எடுத்து வந்தார் என்ற கூறப்படுகிறது. ஆனால் அந்த கரன்சி நோட்டுக்களின் மதிப்பு எவ்வளவு என்ற விவரம் தெரியவில்லை.

அமைச்சர் மான்சரேட்டின் மகன் ரோஹித் கடந்த 2009 ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவா மாநிலத்தில் மான்சரேட்டும் அவரது மகனும் பிரச்சினைக்குரிய நபர்களாக இருந்து வருகின்றனர்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை கற்பழித்ததாக அவரது மகன் ரோஹித் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் பாடகர் ரகத் பதேஹ் அலிகான் ரூ. 60 லட்சம் பணத்துடன் வந்த போது கைது செய்யப்பட்டார். அவர் அந்தப் பணத்தை எதற்காக கொண்டு வந்தார் என்பதற்கு சரியான விளக்கம் தராததால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்