முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் எந்த மதத்தினரை தாக்கினாலும்...

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஆக.12 - அமெரிக்காவில் குடியிருக்கும் எந்த மதத்தினரை தாக்கினாலும் அதை எங்களை தாக்கியதாக கருதுவோம் என்று அதிபர் பாரக் ஒபாமா கடுமையாக எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் நகரில் உள்ள குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் சீக்கியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். சீக்கியர்களை தூண்டிவிடும் விதத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள எந்த மதத்தினர் தாக்கப்பட்டாலும் அது அமெரிக்கர்களை தாக்கியதாகத்தான் கருதுவோம். தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்று அதிபர் பாரக் ஒபாமா கடுமையாக எச்சரித்துள்ளார். அமெரிக்க சமுதாயத்தில் இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் என்றும் ஒபாமா கூறியுள்ளார். இந்த சம்பவம் மூலமாக வழிபாடு ஸ்தலங்களுக்கு செல்ல எந்த அமெரிக்கரும் பயப்பட வேண்டாம். ஒவ்வொரு அமெரிக்கருக்கு தாங்கள் விரும்பும் மதத்தில் சேரலாம். அதற்கு முழு சுதந்திரம் உண்டு. இதில் யாரும் குறுக்கிட முடியாது என்றும் ஒபாமா தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நடந்தது. இதில் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினர்களும் கலந்துகொண்டனர். இப்தார் விருந்து கொடுத்து பேசுகையில் அதிபர் ஒபாமா மேற்கண்டவாறு கூறினார். ஈவு, இறக்கம், சகிப்புத்தன்மை பலம் ஆகிய குணங்கள் அடங்கிய அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையில் இந்தமாதிரியான ஈவு இறக்கமற்ற செயலுக்கு ஒருபோதும் இடமில்லை என்றும் அதிபர் ஒபாமா திரும்பக்கூறினார். இந்த இப்தார் விருந்தில் நடக்கும் தொழுகையில் குருத்தவாராவில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை கேட்டுக்கொள்வோம் என்றும் உலகம் முழுவதும் மத சுதந்திரத்தை பாதுகாக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்றும் ஒபாமா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்