முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்க ஆதரவு பெருகிறது

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

ஜலந்தர்,ஏப்.- 7 - கிரிக்கெட் சிங்கம் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் சேர்ந்து சுமார் 20 ஆண்டுகளாக அணிக்கு வெற்றிகளை குவித்து வருகிறார். கடந்த 1984-ம் ஆண்டுக்கு பிறகு உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தார். இறுதிப்போட்டியில் அவர் சரியாக விளையாடாவிட்டாலும் அதற்கு முன்பு நடந்த போட்டிகளில் ரன்களை குவித்து இந்திய கிரிக்கெட் அணி இறுதிபோட்டிக்கு வர பெரிதும் உதவினார். அதனால் உலக கோப்பைகான இறுதி போட்டியில் கடந்த 1984-ம் ஆண்டுக்கு பின்னர் இப்போது வெற்றிபெற்றுள்ளது. இதனால் நாட்டுக்கு பெருமை சேர்ந்துள்ளது. இதை கெளரவிக்கும் வகையில் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பலதரப்பினரும் கூறி வருகிறார்கள். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் ஆப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட் அணி இருந்து சாதனை புரிந்து வரும் சச்சினால் பல வெற்றிகள் கிடைத்து நாட்டிற்கு புகழை தேடித்தந்துள்ளார். அதனால் அவர் பாரத ரத்னா விருது பெற மிகவும் தகுதிவாய்ந்தவர் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். சச்சின் ஒரு மிகப்பெரிய விளையாட்டு வீரர். கடந்த 21 ஆண்டுகளாக இந்திய அணியை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளார். இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டினை அளவிட முடியாது. அவர் விளையாட மைதானத்திற்குள் வந்தவுடன் ஒவ்வொருவரும் இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள. அதனால் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டிய சரியான தருணம் இதுதான். இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஹாரி கிரிஸ்டினும் சிறந்த தொண்டாற்றியுள்ளார். அவர், வெறும் விளையாட்டு வீரர்களை சாம்பியனாக்கியுள்ளார் என்றும் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்