முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான தெ.ஆ. 2 -வது இன்னிங்சில் 569 ரன் குவிப்பு

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2012      விளையாட்டு
Image Unavailable

பெர்த், டிச. - 3 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 2 -வது இன்னிங்சில் 569 ரன் குவித்தது. அந்த அணி தரப்பில் அம்லா மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர். இதனால் அந்த அணி பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. அம்லா இரட்டை சத வாய்ப்பை நழுவ விட்டார். மேலும், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் வெற்றி பெற 632 ரன்னை இலக்காக தென் ஆப்பிரிக்கா அணி வைத்துள்ளது. இன்னும் 2 நாள் ஆட்ட ம் மீதமுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக் க அணிகளுக்கு இடையேயான 3 -வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அசோ சியேசன் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய தெ. ஆ. அணி முதல் இன்னிங் சில் 225 ரன்னை எடுத்தது. டூபிளீசெஸ் 78 ரன்னும், ஏ.பீட்டர்சென் 30 ரன்னும், பிளாண்டர் 30 ரன்னும், ஜே. பீட்டர்சன் 31 ரன்னும், மார்கெல் 17 ரன்னும், கேப் டன் ஸ்மித் 16 ரன்னும் எடுத்தனர். பின்பு ஆடிய ஆஸ்திரேலிய அணி தெ. ஆ. பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 163 ரன்னில் சுருண்டது. கீப்பர் வாடே அதி கபட்சமாக 102 பந்தில் 68 ரன் எடுத்தார். தவிர, ஹாஸ்டிங்ஸ் 32 ரன்னும், வார்னர் 13 ரன்னும், வாட்சன் 10 ரன்னும், ஹஸ்சே 12 ரன்னும் எடுத்தனர். அடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய தெ ஆ. அணி வெளுத்துக் கட்டியது. இதில் துவக்க வீரராக இறங்கிய அம்லா மற்று ம் டிவில்லியர்ஸ் இருவரும் கலக்கினர். இறுதியில் அந்த அணி 569 ரன்னைக் குவித்தது. அம்லா 4 ரன் வித்தியாசத்தில் இரட்டை சத வாய்ப்பை நழுவவிட்டார். அவர் 221 ப ந்தில் 196 ரன் எடுத்தார். இதில் 32 பவுண்டரி அடக்கம். டிவில்லியர்ஸ் 184 பந்தில் 169 ரன் எடுத்தார். இதில் 21 பவு ண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் ஸ்மித் 100 பந்தில் 84 ரன்னையும், பீட்டர்சென் 23 ரன்னையும், காலி ஸ் 37 ரன்னையும், டூபிளீசெஸ் 27 ரன் னையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 154 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் எடு த்தார். ஜான்சன் 110 ரன்னைக் கொடுத் து 4 விக்கெட் எடுத்தார். ஹாஸ்டிங்ஸ் மற்றும் லியான் ஆகியோருக்கு விக்கெ ட் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சி ல் 632 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை தெ. ஆ. அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந் த அணி 3 -வது நாள் ஆட்டநேர முடி வில் 2-வது இன்னிங்சில் 13 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 40 ரன்னை எடுத்து உள்ளது . வார்னர் 29 ரன்னுடனும், கோவன் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்