முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      உலகம்

ஏப்.16-பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பிரமதர் கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்ப்பதையும், ஆளில்லா விமானம் மூலம் (ட்ரோன்) தாக்குதல் நடத்துவதையும் அமெரிக்கா நிறுத்தவேண்டும் என்று பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் தங்கியுள்ள அமெரிக்க உளவுத்துறையினர் மற்றும் கான்ட்ராக்டர்கள் 335 பேர் வெளியேறவேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன்பாக கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர் சுஜா பாஷா அமெரிக்காவில் சி.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கடந்த திங்கள்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினார். உளவுத்தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை நிறுத்தும் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் தெற்குவசிரிஸ்தான் பகுதியில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாயினர்.
இது போன்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போராடிவருகிறது. தீவிரவாதிகளையும் அப்பாவி மக்களையும் பிரித்து வைத்துள்ளோம். ஆனால் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் இவர்களை மீண்டும் இணைத்துவிடுகிறது. இந்த தாக்குதல்கள் உள்நாட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த போரும் வெற்றியடைய முடியாது. தீவிரவாதம், சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒரு மனிதவெடிகுண்டு வெடித்தால் கூட அது அன்னிய முதலீட்டாளர்களை பீதியடையச்செய்யும். எனவே இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்