முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத சோதனைக்கு தயாராகும் வட கொரியா

ஞாயிற்றுக்கிழமை, 30 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

சியோல், டிச.30 - வெள்ள சேத பாதிப்பிலிருந்து அணு உலையை சரி செய்துள்ள வட கொரியா, அணு ஆயுத சோதனைக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் கூறியிருப்பதாவது: வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட அணு பரிசோதனை மையத்தை, வட கொரியா சீரமைத்து  உள்ளது. இரண்டு வார முன்னறிவிப்புடன், அணு ஆயுத பரிசோதனை நடத்த அது தயாராக உள்ளது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா சமீபத்தில் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்தது இதற்கு அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. வட கொரியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. வட கொரியா சமீபத்தில் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. வட கொரியாவின் நடவடிக்கைகள் குறித்து தகவலை வெளியிட்டு வரும் 38 நார்த் என்ற இணையதளத்திலும் இது குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த கனமழை  காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், வட கொரியா அணு உலைகள் பாதிப்படைந்தன. அவற்றை வடகொரியா மிகத்  துரிதமாகச் சரி செய்துள்ளது. ஏற்கனவே, 2 அணு ஆயுத சோதனைகளை நிகழத்தியுள்ள வட கொரியா 3 ஆவது 

முறையாக சோதனையில் ஈடுபட்டால், அது சீனாவை கோபமூட்டக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்