முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி தொடரும் - தோனி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். 27 -  இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ணியின் வெற்றி தொடரும் என்று அந்த அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றிய விபரம் வரு மாறு - 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தி ல் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித் தது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் எடுத்தனர். 

அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான மைக் ஹஸ்சே 48 பந்தில் 61 ரன்னும், (6 பவுண்டரி, 1 சிக்சர்), முரளி விஜய் 31 ரன்னும் எடுத்தனர். டெய்லர் 3 விக்கெட்டும், தாமஸ் 2 விக்கெட்டும் கைப்பற் றினார்கள். 

பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில், புனே வாரியர்ஸ் அணியால் 143 ரன் இலக்கை எடுக்க முடியவில்லை. அந்த அணியால் 6 விக் கெட் இழப்புக்கு 117 ரன்னே எடுக்க முடிந்தது. 

புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனான யுவராஜ் சிங் அதிகபட்சமாக 34 ரன் எடுத்தார். முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மார்கெல் 3 விக்கெட்டும், பொலிஞ்சர், அஸ்வின் இருவரும் தலா 2 விக்கெட் கை ப்பற்றினார்கள். 

சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 3 -வது வெற்றி இதுவாகும். இந்த 3 வெற்றியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் கிடைத்தது. புனே அணி தொடர்ந்து 3 -வது தோல்வியைத் தழுவியது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, நிருபர்களைச் சந்தித்த செ ன்னை அணியின் கேப்டன் தோனி அவர்களது கேள்விக்கு அளித்த பதில் வருமாறு - 

இந்த வெற்றி எங்களுக்கு முக்கியமான வெற்றியாகும். தொடர்ந்து தோல்வியைத் தழுவினால் அதனால் பாதிப்பு ஏற்படும். எங்களது அணியின் வெற்றி தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

அதே நேரம் புனே அணியைத் தோற்கடிக்க நான் அதிக திட்டம் எதுவு ம் வகுக்கவில்லை. பந்து வீச்சாளர்களுடன் அடிக்கடி ஆலோசிக்கவில் லை. ஆனால் பெளலர்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அதில் நான் பங் கேற்கவில்லை. பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதை விட பீல்டிங் மிகவும் அபாரமாக  இருந்தது. 

எங்களது அணி எடுத்த 142 ரன்னை எளிதானதாகவே கருதினேன். 155 ரன்கள் வரை நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். ஆனால் பீல்டர்கள் சிறப்பாக பீல்டிங் செய்து ரன்னைக் கட்டுப் படுத்தினார்கள். இவ்வா று அவர் கூறினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்த புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனான யுவராஜ் சிங் நிரு பர்களிடம் இந்தத் தோல்வி குறித்து கூறியதாவது - 

சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் எங்களது அணி தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. முதல் 6 ஓவரில் 4 விக்கெட் விழுந்து விட்டது. இதனால் அதில் இருந்து மீண்டு வர கஷ்டப்பட்டோம். நான் கடைசி வரை நின்று வெற்றி பெற வைக்க முடியாமல் போனது ஏமாற்றமே. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்