முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ராணுவம் பயங்கர சண்டை

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப்.28 - பாகிஸ்தான் ராணுவத்தினரும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் தங்களது நாடுகளின் எல்லையில் ஓரிடத்தில் நேற்று பயங்கர சண்டையில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அங்கிருந்த தலிபான் மற்றும் அல் குவைதா தீவிரவாதிகள் அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் தப்பிச் சென்றனர். இந்த தீவிரவாதிகள் இப்போது பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள தெற்கு வஜ்ரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் தங்கி பல்வேறு வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு வஜ்ரிஸ்தான் பகுதியில் உள்ள ஆகூர் அடா என்ற நகரில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றின் மீது ஆப்கானிஸ்தான் படையினர் நேற்று திடீர் என்று பீரங்கி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் திருப்பி தாக்கினர். இந்த தாக்குதல் நீண்ட நேரம் நீடித்தது. 

இந்த பயங்கர சண்டையில் ஆப்கானிஸ்தான் படையினர் 3 பேர் பலியானதாகவும் பாகிஸ்தான் படையினர் 2 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்