முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி ஒரு மிகப் பெரிய வெற்றி: ஜனாதிபதி உரை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி,பிப்.22 - கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகள் ஒரு மிகப் பெரிய வெற்றி என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வர்ணித்துள்ளார். டெல்லி மக்களுக்கும் அவர் தனது பாராட்டை தெரிவித்தார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமானது. இது ஆண்டின் முதல் கூட்டத் தொடர். பொதுவாக முதல் கூட்டத்  தொடரின் முதல் நாளன்று ஜனாதிபதி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நேற்று பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் பல்வேறு அம்சங்கள் குறித்து குறிப்பிட்டார். 

குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளை சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, இது ஒரு மிகப் பெரிய வெற்றி என்று வர்ணித்தார். இந்த விஷயத்தில் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்த டெல்லி மக்களுக்கு அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் நடந்து முடிந்த போட்டியில் நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் அதிகளவில் பதக்கம் வென்று ஒரு வரலாறு காணாத சாதனையை படைத்து விட்டதாக அவர் பாராட்டினார். பதக்க பட்டியலில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிகளவில் இடம் பிடித்ததையும் சுட்டிக் காட்டிய ஜனாதிபதி இது ஒரு மிகப் பெரிய வெற்றி என்று தெரிவித்தார். இந்த சாதனை குறித்து இந்திய மக்கள் பெருமைப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டி 14 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் 71 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த 6 ஆயிரத்து 81 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டிகளில் இந்தியா 101 பதக்கங்களை குவித்தது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா இந்தளவிற்கு வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்