முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகுக்கே வழிகாட்டி மண்டேலா: ஒபாமா புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

பிரிட்டோரியா, ஜூலை. 1 - நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் உலகுக்கே வழிகாட்டியாக திகழ்பவர் மண்டேலா என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒபாமா, அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் உலகுக்கே வழிகாட்டியாக திகழ்பவர் மண்டேலா. தனக்கு எது சரி எனப்படுகிறதோ அதற்காக உறுதியுடன் அவர் போராடினார். நிறவெறி ஆட்சியில் இருந்து தென்னாப்பிரிக்கா விடுதலை பெற்றது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் உலகம் முழுவதிலிருந்தும் பலர் தங்களின் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார். 

ஜேக்கப் ஜூமா செய்தியாளர்களிடம் கூறுகையில், மண்டேலாவின் உடல் நிலை சீராக உள்ளது. அதே சமயம் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை. அவர் விரைவில் குணமடைவார். மண்டேலாவின் கொள்கைகள், கனவுகளை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். 

முன்னதாக ஒபாமாவுக்கும், ஜூமாவுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் தொழில், வர்த்தகம், மதம், வெளியுறவு கொள்கைகள் தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒபாமா இன்று தான்சானியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்