முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ராணுவம் தாக்கியதில் பொதுமக்கள் 30 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்,மே.22 - சிரியாவில் அதிபர் பாஷாஅல்ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் மீது அதிபர் பாஷா ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். இது வரை அங்கு 850 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிபர் பாஷாரை பதவி விலகி ஜனநாயகத்தை மலர செய்ய வேண்டும். அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொழுகை முடித்து பொதுமக்கள் சிரியாவில் உள்ள பல நகரங்களில் அமைதியான முறையில் பேரணியும் போராட்டங்களும் நடத்தினர். அப்போது துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் ஒன்று பல நகரங்களில் புகுந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 30 பேர் பலியாகினர். அவர்களில் போலீசாரும் அடங்குவர். இதற்கிடையே மர்ம கும்பல் என்ற போர்வையில் சிரியா ராணுவம்தான் தாக்குதல் நடத்தியது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்