முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிசாட் 8 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், மே.22 - ஜிசாட் 8 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். வீடுகளுக்கு டி.வி. சேவையை அளிக்கும் டி.டி.எச். என்ற சேவையாக விரிவுபடுத்துவதற்காக ஜிசாட் 8 என்ற பெயரில் புதிய நவீன செயற்கை கோள் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

இந்த செயற்கை கோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரு என்ற இடத்தில் உள்ள ஐரோப்பிய ஏரியான் ஸ்பேஸ் என்ற ஏவுதளத்தில் இருந்து  நேற்று பின்னிரவு இந்திய நேரப்படி 2.08 மணிக்கு ஏரியான் 5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த தகவலை பெங்களூரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் இந்த செயற்கை கோளுடன் ஜப்பான் நாட்டின் எஸ்.டி. 2 என்ற செயற்கைக்கோளும்  துணை செயற்கை கோளாக இதே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜிசாட் 8 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இந்தியா விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்  பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

விண்வெளி துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலமாக இந்த வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்தார்

சுமார் 12 ஆண்டு காலத்திற்கு செயல்பட இருக்கும் இந்த ஜிசாட் 8 செயற்கை கோள் 3,100 கிலோ எடை கொண்டதாகும். அதிக விசையும் அதிக எடையும் கொண்ட இந்த செயற்கை கோளை இந்திய விஞ்ஞானிகளே நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய துணை கண்டம் முழுவதையும் கவரும் வகையில் இந்த செயற்கை கோளில் மொத்தம் 24 டிரான்ஸ்போன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்