முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மரியம்பிச்சை மரணம் மதுரை ஆதீனம் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, மே.- 24 - அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் திடீர் மரணம் அடைந்ததற்கு மதுரை ஆதீனம் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் இந்த விபத்து குறித்து வெளியிட்ட அறிக்கையில், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திருச்சி மரியம் பிச்சை நேற்று காலை சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதர்ச்சி அடைந்தோம். மரியம்பிச்சையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம். அவரை திடீரென இழந்து வேதனைப்படும் தமிழக முதல்வருக்கும், அமைச்சரவை சகாக்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்