முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். க்கான விண்ணப்பங்களை அளிக்க நாளை கடைசி நாள்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.1 - தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இதுவரை மொத்தம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க நாளை 2 ம் தேதி கடைசி நாளாகும். சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களை சேர்க்க கடந்த மாதம் 16 ம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இதுவரை மொத்தம் 22 ஆயிரம் பேர் விண்ணப்பத்தை பெற்றுள்ளனர். மொத்தம் 9 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு அனுப்பியுள்ளனர். விண்ணப்பத்தை பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் நாளை 2 ம் தேதி கடைசி நாளாகும். மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் டிப்ளமோ(நர்சிங்), பி.எஸ்.சி. நர்சிங் - பி. பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பதை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கவும் இம்மாதம் 2 ம் தேதி அதாவது நாளை கடைசி நாளாகும். உறுதி செய்து கொள்ள எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்பி உள்ள மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு தங்களது விண்ணப்பம் சென்று சேர்ந்து விட்டதை உறுதி செய்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

சுகாதார துறையின் இணையதளம் சூசூசூ.சிடூகீடீஹங்சிகீ.ச்ஙுகி மற்றும் தமிழக அரசின் இணையதளம் சூசூசூ.சிடூ.கிச்சு.டுடூ ஆகியவற்றில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 மதிப்பெண்ணை டைப் செய்து பூர்த்திசெய்த விண்ணப்பம் சேர்ந்து விட்டதை உறுதி செய்து கொள்ளலாம் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்