முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.  தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்அமைச்சர் பொறுப்பை ஏற்றார். இவர் முதல்அமைச்சர் பொறுப்பை ஏற்றதற்கு பிறகே கடந்த மாதம் 22-ம்தேதி  தமிழக அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  மேட்டூர் அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஜூன்.6-ம்தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.  அந்த உத்தரவின்படி இன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று மாலை  நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.98 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுவாக காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ம்தேதிதான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இப்போது முன்கூட்டியே ஜூன்6-ம்தேதி தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். நாடு குடியரசு ஆனதற்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து  ஜூன்.12-ம்தேதிக்கு முன்பாக தண்ணீர் திறந்து விடுவது இதுவே முதல்முறை . முதல்வர் ஜெயலலிதாவின் இந்த சாதனை உத்தரவிற்கு தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா பகுதி விவசாயிகள்  மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். முன்கூட்டியே சாகுபடி செய்ய  முதல்வரின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்