முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முதல்வரானதற்கு ஊழக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்-அத்வானி பேட்டி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 6 - ஜெயலலிதா வெற்றி பெற்றதன் மூலம் ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்றும் முதல்வரான ஜெயலலிதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக சென்னை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும்போது முதல்​அமைச்சரை சந்திப்பேன். இந்த முறையும் ஜெயலலிதாவை சந்திக்க திட்ட மிட்டு இருந்தேன். ஆனால் நேற்று இரவு டெல்லியில் பாபா ராம்தேவ் கைது மற்றும் அதை தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றால் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அவசர ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை.
தமிழ்நாட்டில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பதவி ஏற்றதுமே தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது அவரிடம் nullநீங்கள் முதல்​அமைச்சராக வெற்றி பெற்றது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினேன்.
இந்த தேர்தலில் மத்திய அரசு ஊழல் பிரச்சினைகளுக்கு எல்லாம் கூட்டணி கட்சியான தி.மு.க. மீது மட்டும் பழி சுமத்தி வந்தது. ஆனால் தேர்தல் தோல்விக்கு பின்னர் நிலைமை மாறி விட்டது. ஊழலை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தேர்தல் மூலம் நிருபணம் ஆகியுள்ளது.
தி.மு.க. வெற்றி பெற்று இருந்தால் ஊழல் ஒரு பிரச்சினை அல்ல என்ற நிலை ஏற்பட்டு இருக்கும். ஆனால் ஜெயலலிதா வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் ஊழலுக்கு எதிராக உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1975 ஜூன் மாதம் வரலாற்றில் முக்கியமான காலம். 11-ம் தேதி குஜராத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியது. 12-ம் தேதி இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதே போல் இந்த ஜூன் மாதத்திலும் ஊழலுக்கு எதிராக ஜன நாயக ரீதியில் போராட்டம் நடத்திய பாபா ராம்தேவை இரவில் கைது செய்ததும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்களை தாக்கியதும் ஜாலியன் வாலாபாக் படுகொலையைதான் நினைவு படுத்துகிறது.
எனவே இச்சம்பவமும் அரசியலில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். இதனை கண்டித்து டெல்லியில் இன்று தர்ணா நடை பெறுகிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு அத்வானி கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா​ அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுமா? என்று அத்வானியிடம் கேட்டபோது, கூட்டணி அமைவதற்கான சூழ்நிலை இப்போது எழவில்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்