முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்திற்கு பல திட்டங்கள் - எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,பிப்.26 - பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார். இதற்கு பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். 

பாராளுமன்ற லோக்சபையில் நேற்று 2011 - 12 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். தனது பட்ஜெட்டில் கொல்கத்தா மெட்ரோ உட்பட பல்வேறு திட்டங்களை மேற்கு வங்க மாநிலத்திற்காக மட்டும் மம்தா பானர்ஜி அறிவித்தார். 

இதற்கு பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அவர் பட்ஜெட் தாக்கல் செய்த போது இடையிடையே எம்.பிக்கள் குறுக்கிட்டதால் அவ்வப்போது கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு மட்டும் மம்தா பானர்ஜி அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக எம்.பிக்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால் மம்தா பானர்ஜியோ தனது மாநிலத்தை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். 

இதனால் மேலும் ஆத்திரமடைந்த எம்.பிக்கள் கூச்சல் குழப்பம் எழுப்பினர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அதற்கு பலன் கிட்டவில்லை. முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவும் எழுந்து இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மம்தா அதை சிறிதும் பொருட்படுத்தவே இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்