முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கப்பல் மீது இந்திய கப்பல் மோதியதா?

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,ஜூன்.19 - அரபு கடலில் பாகிஸ்தான் கப்பல் வந்துகொண்டியிருந்தபோது அதன் மீது இந்திய கப்பல் மோதியதாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதகரத்தில் பாகிஸ்தான் புகார் செய்துள்ளது. சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை எகிப்து நாட்டு கப்பல் ஏற்றி கொண்டு வந்துகொண்டியிருந்தது. அந்த கப்பலுக்கு பாதுகாப்பாக பாகிஸ்தான் நாட்டு  போர் கப்பல் ஒன்று உடன் வந்துகொண்டியிருந்ததாம். அந்த கப்பல்கள் மீது இந்திய கப்பல் மோதியதாக பாகிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி இந்திய தூதரகத்தில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது என்று வெளியுறவு அதிகாரி தெஹ்மினா ஜன்ஜூவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

எகிப்து நாட்டை சேர்ந்த வர்த்தக கப்பல் சூயஸ், சோமாலியா கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு வந்தது. அதற்கு மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பாக எங்கள் நாட்டு கடல்படை பபுர் வந்துகொண்டியிருந்தது. அப்போது இந்திய கப்பல் கோதாவரி, பல தடைகளை ஏற்படுத்தியதோடு தவறான வழியிலும் வந்தது. இதனால் எங்கள் கப்பல் மீது கோதாவரி கப்பல் பயங்கரமாக மோதியது. இதை நாங்கள் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்