முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துவங்கியது இந்தியா-பாக்., செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், ஜுன் 24 - இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று இஸ்லாமாபாத்தில் துவங்கியது. கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி மும்பையில் பல்வேறு முக்கிய இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 நடத்திய பயங்கர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த நல்லுறவு பாதிக்கப்பட்டது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நடந்துவந்த நல்லெண்ண பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன. இப்போது சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சற்று சமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் துவங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் சல்மான் பஷீர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்துவது குறித்தும், ஆப்கான் பிரச்சனை குறித்தும், பிராந்திய பிரச்சனைகள், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்