முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் பழமை வாய்ந்த போர் முறைக்கு பாராட்டு

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

டாக்கா,பிப்.28 - இந்தியாவின் பழங்கால போர் முறை இன்னும் மிகவும் சிறந்ததாக இருக்கிறது என்று வங்கதேச எழுத்தாளரும் மனித உரிமைக்காக போராடி வருபவருமான ஷாஹ்ரியர் கபீர் என்பவர் தெரிவித்துள்ளார். கபீர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் இந்தியாவின் பழங்கால போர் முறையை மிகவும் பாராட்டி உள்ளார். இந்த கலியுகத்திலும் அந்த போர் முறை மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. போரின்போது எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்று பழங்கால போர் முறையில் கூறப்பட்டுள்ளது. அது மிகவும் நாகரீகமானதாகும் மனிதாபிமானதாகவும் இருக்கிறது. இரவு வந்து விட்டால் போர் தொடுக்கக்கூடாது. 

எதிரி ஆயுதம் இல்லாமல் இருந்தால் அவனுக்கு எதிராக ஆயுதத்தை பயன்படுத்தக்கூடாது, சிறைக்கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளவைகள் மிகவும் சிறந்த முறை என்று கபீர் கூறியுள்ளார். ராமாயண போரில் ராவணன் ஆயுதத்தை இழந்து நின்றபோது அவனுக்கு எதிராக ஆயதத்தை பயன்படுத்தாமல் இன்று போய் நாளை வா என்று ராமன் கூறியதும் மகாபாரத்தில் கெளரவர்களுக்கு எதிராக அர்ஜூன் பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தாதது எல்லாம் ஒரு சிறந்த போர் முறை என்றும் இந்த காலத்தில் போர் முறைக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்தியாவின் பழமையான போர் முறைக்கு ஈடாகாது என்று கபீர் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்