முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் காங்கிரஸ்- மாயாவதி அரசு இடையே மோதல்போக்கு உச்சக்கட்டம்

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.- 28 - உத்திரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ்-முதல்வர் மாயாவதி கட்சி இடையே மோதல்போக்கு உச்சக்கட்டத்தை அடந்துள்ளது. இதனையொட்டி தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் சச்சின் மர்ம மரணம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சச்சின் மர்மசாவு தொடர்பாக நியாயம் கேட்டு தலைநகர் லக்னோவில் காங்கிரஸ் நியாய யாத்திரை நடத்தவிருந்தது. இதற்கு முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு அனுமதியும் மறுத்துவிட்டது. காங்கிரஸ் நியாய யாத்திரையை நடத்தினால் பிரச்சினை எழும் என்று கருதும் மாயாவதி அரசு, லக்னோவில் 144 தடை உத்தரவை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி நியாய யாத்திரை நடைபெறும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் காங்கிரசுக்கும் மாயாவதி அரசுக்கும் இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

இதற்கிடையில் காங்கிரஸ் யாத்திரை நடத்தினால் அதை சமாளிப்பது குறித்து முதல்வர் மாயாவதி நேற்று லக்னோவில் உயரதிகாரிகளுடன் விவாதித்தார். 

காங்கிரஸ் கட்சி யாத்திரை நடத்தினால் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும். அதனால் நியாய யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் அனில்குமார் சாகர் கூறினார். 

அனுமதி மறுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் பேரணி நடத்த அனுமதி மறுப்பது மாயாவதி அரசின் பாசிஷ போக்கை காட்டுகிறது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரீடா பகுகுணா ஜோஷி குற்றஞ்சாட்டினார். மேலும் நியாய யாத்திரைக்கு மீண்டும் அனுமதி கூறி மாநில காங்கிரஸ் உயர்மட்டக்கூட்டம் இன்று நடக்கிறது. 

லக்னோவில் நேற்று நியாய யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இதற்கு மாயாவதி அரசு அனுமதி மறுத்துவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்