முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து சுற்றுப் பயணம்: இந்திய அணி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 3 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக 19 பேர் கொண்ட உத்தேச இந்தி ய கிரிக்கெட் அணியை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் டெண்டுல்கர், காம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்று உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையிலா  ன அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதற்கட்டமாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இதன் முதல் டெஸ்ட் வரும் 21 - ம் தேதி துவங்க இருக்கிறது. 

தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள பட்டியலில் துவக்க வீரர்களாக சே வாக், காம்பீர், மற்றும் விஜய் ஆகிய 3 பேரும் இடம் பெற்று உள்ளனர். மிடில் ஆர்டரில் ராகுல் டிராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மண், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் கோக்லி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 

கேப்டன் தோனி மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் விக்கெட் கீப்ப ர்களாக இடம் பெற்று உள்ளனர். சுழற் பந்து வீச்சாளர்களாக ஹர்பஜ ன் சிங் மற்றும் அமித் மிஸ்ராவும், வேகப் பந்து வீச்சாளர்களாக ஜா ஹிர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், பிரவீன் குமார், முனாப் படேல் மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். 

சேவாக், காம்பீர், ஜாஹிர்கான் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகிய 4 வீரர்களும் காயம் காரணமாக மே.இ.தீவு சுற்றுப் பயணத்தில் இடம் பெறவில் லை. தற்போது அவர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிட்சை எடுத்து வருகின்றனர். 

இதில் காம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் முழு உடற்தகுதி பெற்று விட்டனர். சேவாக் மற்றும் ஜாஹிர்கானது உடற்தகுதி கேள்விக் குறி யாக உள்ளது. 

சேவாக் உடற்தகுதி பெறாத பட்சத்தில் முரளி விஜய் துவக்க வீரராக இறங்க வாய்ப்பு உள்ளது. பிரவீன் குமாருக்குப் பதிலாக ஸ்ரீசாந்த் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. முனாப் படேல் மற்றும் மிது ன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. 

பார்த்திவ் படேல் ரிசர்வ் விக்கெட் கீப்பராகவும், விஜய் ரிசர்வ் துவக்க வீரராகவும் இருப்பார்கள். அமித் மிஸ்ரா கூடுதல் சுழற் பந்து வீச்சாள ராக இருப்பார். ரெய்னாவுக்கு மிடில் ஆர்டரில் 6 -வது இடம் அளிக்க ப்பட்டு உள்ளது. 

மே.இ.தீவு பயணத்தில் விராட் கோக்லி, முனாப் படேல் மற்றும் மிது ன் ஆகியோர் பிரகாசிக்கவில்லை. எனவே இங்கிலாந்து பயணத்தில் அவர்களுக்கு லெவன் அணியில் இடம் கிடைப்பது சிரமமே. 

இந்திய அணி : - தோனி (கேப்டன்), சேவாக், காம்பீர், டெண்டுல்கர், விஜய், லக்ஷ்மண், டிராவிட், ரெய்னா, கோக்லி, யுவராஜ் சிங், பார்த் திவ் படேல், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, ஜாஹிர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், பிரவீன் குமார், முனாப் படேல் மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்