முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் உணவின்றி தவிக்கும் தமிழர்கள்

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

ராமநாதபுரம் மார் 1 - உள்நாட்டுக் கலவரம் வெடித்துள்ள லிபியாவில் உணவு, குடி நீரின்றி தவித்து உயிருக்கு போராடி வரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்நத 14 பேரை மீட்டு அழைத்து வர வேண்டும் என்று உறவினர்கள் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்து தலைநகர், திரிபோலி உட்பட முக்கிய நகரங்களில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வேலைக்கு சென்ற பல ஆயிரக்கணக்கானோர் அங்கு தவித்து வருகின்றனர். மத்திய அரசு அவர்களில் சில நூறு பேரை மட்டுமே அழைத்து வந்துள்ளது. மீதமுள்ளவர்கள் இன்னும் அங்கு உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கட்டாளங்குளத்தை சேர்நத முனிய சாமி, மாதவன், மணிகண்டன், ராமமூர்த்தி , வேணு கோபால், முருகன், காளிமுத்து மற்றும் கோட்டை யேந்தலை சேர்ந்த மருதுபாண்டி காஞ்சி, மாதவன், ராமேஸ்வரத்தை சேர்ந்த மாதவன் ஆகிய 14 பேரும் கடந்த மூன்பு தான் கட்டுமான பணி கூலி வேலைக்காக சென்றிருந்தனர்.

தற்போது அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தால் வெளியில் நடமாட முடியவில்லை என்றும், உணவு குடிநீரின்றி ஒரு வார காலமாக தவித்து வருவதாகவும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அவர்கள் குடும்பத்தினர் கண்ணீரும் கம்பலையுமாக நேற்று ராமநாதபுரத்திற்கு வந்து மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் லிபியாவில் தவிக்கும் 14 பேரையும் மீட்டு அழைத்து வா மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்