முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2012-ல் சென்னையில் செஸ் சேம்பியன்ஷிப்

வியாழக்கிழமை, 14 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை.14 - சென்னையில் வருகின்ற 2012 ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கி ஆணையிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில், உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது, 2012 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியினை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இதுவரை இந்தியாவில் சதுரங்க போட்டிகலில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7-வது இடத்தை பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாத்ததில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி, தற்போதைய உலக வாகையரான கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்ட் ஆகியோரிடையே நடைபெறும்.

இந்த போட்டியை 2012 ஆம் ஆண்டு சென்னையில் நடத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார. உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான செலவு சுமார் 20 கோடி ரூபாய் ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்