முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்புக்கு டோனி கண்டனம்

சனிக்கிழமை, 16 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

லண்டன், ஜூலை.16 - மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக கேப்டன் டோனி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  மும்பை குண்டு வெடிப்பு தகவல் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது என்னை வேதனையில் ஆழ்த்தியது. 3 ஆண்டுகளுக்கு முன்பும் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய போது நான் வேதனைப்பட்டேன். அதே சூழல் இப்போது உருவாகி உள்ளது. உலகில் எந்த இடத்தில் இது போன்ற தாக்குதல் நடந்தாலும் அது தவறான கண்டிக்கத்தகுந்த விஷயம். இது போன்ற தாக்குதல் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 

கடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்த மும்பை இயல்பு நிலைக்கு மிக வேகமாக திரும்பி விட்டது. அதே போல இப்போதும் இயல்பு நிலைக்கு மும்பை விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்