முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலையாள பட இயக்குநரின் மகள் உள்பட கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் 3 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மாமல்லபுரம், ஜூலை - 26 - மாமல்லபுரம் அருகே லாரி- கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பிரபல மலையாள பட இயக்குநர் மகள் உள்பட கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 

கேரள மாநிலம், கொச்சின் நகரத்தை சேர்ந்தவர் பிரபல மலையாள பட இயக்குநர் ஜோஷி. இவரது மகள் ஐஸ்வர்யா(24), எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ராதிகா(24). கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் அர்ஜுன்(23). கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினியர்களான இவர்கள் 3 பேரும் ஊரப்பாக்கத்தில் தங்கியிருந்து செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் தனியார் சாப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அர்ஜுனுக்கு சொந்தமான காரில் ஐஸ்வர்யா, ராதிகா, அவர்களுடன் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஏசுதாஸ்(24), அஸ்வின்(27) உள்ளிட்ட 5 பேரும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.  அங்கு அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு இரவு உணவு விடுதியில் டின்னர் முடித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் ஊரப்பாக்கத்திற்கு  திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அர்ஜுன் கோவளம் நோக்கி ஓட்டி வந்தார். இரவு 11.30 மணியளவில் கார் கிழக்கு கடற்கரை சாலை சூளேரிக்காடு என்ற இடத்தில் சென்றபோது எதிரே மாமல்லபுரம் நோக்கி வந்த மணல் லாரி ஒன்று கார் மீது டமார் என்று சத்தத்துடன் நேருக்கு நேர் பயங்கரமாகமோதியது.  இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த சாப்ட்வேர் என்ஜினியர்கள் இடிபாடுகளில் சிக்கி சத்தம் போட்டனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.  இதில் சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா, ராதிகா, அர்ஜுன், ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்தனர். ஏசுதாஸ், அஸ்வின் ஆகியோர் பலத்த காயத்துடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் மீது மோதிவிட்டு  தப்பிச் சென்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  திருநாவுக்கரசு, சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்