முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால்கி மனைவி மறைவு: ஜெயலலிதா இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, ``டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.'' நாளிதழின் துணை ஆசிரியர் எஸ்.பாலகிருஷ்ணன் மனைவி கமலா மரணமடைந்ததையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டு அவருக்கு இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார். இதனையடுத்து அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா சார்பாக நேற்று மாலை அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், அ.தி.மு.க. பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர்கள் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி எம்.எல்.ஏ., சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ், செயலாளர் அ.அன்வர்ராஜா, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்  அ.தமிழ்மகன் உசேன், தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், செய்தி சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சருமான ஜி.செந்தமிழன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ.முஹமத்ஜான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் எஸ்.பி.எம்.சையது கான், சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை செயலாளர் ஜெ.சி.டி.பிரபாகர் எம்.எல்.ஏ., இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நா.பாலகங்கா எம்.பி., வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை நெசப்பாக்கம், ஜெயபாலாஜி நகரில் வைக்கப்பட்டுள்ள டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் துணை ஆசிரியர் பாலகிருஷ்ணன் மனைவி கமலாவின் பூத உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்கள்.  அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும் உடன் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்