முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்யவில்லை: கவாஸ்கர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 7 - ஆதரவான கருத்தை தெரிவிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஒப் பந்தம் எதுவும் செய்யவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாயஸ்திரி ஆகியோர் தெரிவித்தனர். இது பற்றிய விபரம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கவாஸ்கர் மற்றும் ரவிசாஸ்திரி இருவரும் டெலிவிசன் வர்ணனையாளர்களாக உள்ளனர். 

போட்டியின் போது, இருவரும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, விமர்சனம் செய்து இருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) கொள்கைகளுக்கு எதிராகவோ அல்லது நல ன்களுக்கு எதிராகவோ அவர்கள் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். 

கிரிக்கெட் வாரியத்திடம் ஆண்டு தோறும் வருமானம் பெற்று அதற்கு ஆதரவாகவே இருவரும் கருத்து தெரிவித்து வருவதாக தகவல் வெளி யாகி உள்ளது. 

கிரிக்கெட் வாரியத்தின் கருத்தை தெரிவிப்பதற்காகவே அவர்கள் இரு வரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்காக இருவருக்கும் ஆண்டு தோறும் ரூ. 3.6 கோடி வழங்கப்பட்டு வருவதாக மும்பையில் இருந்து வெளியாகும் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

நடுவரின் முடிவை மறுபரிசீனை செய்யும் முடிவை (யு.டி.ஆர்.எஸ்.) கிரிக்கெட் வாரியம் எதிர்த்து வருகிறது. சமீபத்தில் இது தொடர்பாக ரவி சாஸ்திரியும், நாசிர் உசேனும் டெலிவிசன் வர்ணனையின் போது வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டனர். 

யு.டி.ஆர்.எஸ். முறைக்கு ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்தார். பணம் பெற்று அவர் தனது கருத்தை தெரிவிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான நாசர் உசேன் கடைசியாக கூறினார். 

இந்த தகவலை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். ரவி சாஸ்திரியும், கவாஸ்கரும், வர்ணணையாளராக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் செயல்படுகிறார்கள் என்றார். 

ஆனால் இதை கவாஸ்கரும், ரவிசாஸ்திரியும் மறுத்துள்ளனர். கிரிக்கெ ட் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது உண்மை. ஆனால் கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவாக மட்டும் கருத்து மோதலில் ஈடுபடுவது இல்லை என்று மறுத்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்