முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை குண்டு வெடிப்பு: குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் ஆக.14 - கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ம் தேதி இரட்டைக் குண்டுவெடிப்பு நடந்தது. கோழிக்கோடு பஸ் நிலையத்தில் நின்ற 2 பஸ்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததில் சிலர் காயம் அடைந்தனர். மாரநாடு பகுதியில் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கோஷ்டியினர் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக தெரியவந்தது. மேலும் இதில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கை விசாரித்து 7 பேரை குற்றவாளிகளாக சேர்த்து சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. முதல் குற்றவாளியாக நசீர் சேர்க்கப்பட்டார். வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். இந்த வழக்கில் முதல் 7 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. முதல் குற்றவாளி நசீருக்கு 3 ஆயுள் தண்டனையும், 1.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக இவர் செயல்பட்டதால் இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஷவாசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை ஏக காலத்தில் குற்றவாளிகள் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்