முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பர்தா அணிவதற்கு புதிய கட்டுப்பாடுகள் ஆஸி. அரசு கெடுபிடி

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

சிட்னி,செப்.- 3 - முஸ்லீம் பெண்கள் அணிந்துள்ள பர்தாவை நீக்கி போலீசாருக்கு முகத்தை காட்டாவிட்டால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய உத்தரவு கெடுபிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் குற்றவாளியான ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு பதிலாக போலீசார் தவறாக பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவரை கைது செய்தனர். பின்னர் சோதனையில் அவர் குற்றவாளியல்ல என்று கண்டறியப்பட்டு விடுவிக்கப்பட்டார். பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிந்து வருவதால் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தப்புவதற்கு வாய்ப்புள்ளது. இந்த குழப்பங்களை நீக்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் நியு சவுத்வேல்ஸ் மாகாணத்தில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு புதியகட்டுப்பாடுகள் வரவுள்ளது. அதன்படி சாலையில் செல்லும் முகமுடி அணிந்தவர்கள், ஹெல்மெட் அணிந்தவர்கள், பர்தா அணிந்தவர்கள் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் முகத்திரையை நீக்க சொன்னால் உடனே அவர்கள் முகத்தை காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிடில் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறினால் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். நீதிமன்றங்களிலும் இந்த சட்டம் அமலில் இருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில் பெண்களின் முகத்திரையை விலக்கி பார்க்கும் அதிகாரம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது சட்டமாகவே இயற்றப்பட்டுள்ளது. பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பிறகு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்