முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் நடத்திய 10வது ஆண்டு நினைவு தினம்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப்.11 - அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்கள் மீது அல் குவைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமான இன்று அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி நியூயார்க்கில் உள்ள  உலக வர்த்தக கோபுரம் மீதும் வாஷிங்டன் நகரில் உள்ள மெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மீதும் அல் குவைதா தீவிரவாதிகள் விமானங்களை மோதவிட்டு பயங்கர தாக்குதலை நடத்தினர். இநத தாக்குதலில் 3000க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த தாக்குதலுக்கு பிறகு அல் குவைதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன்  இந்த ஆண்டின்முற்பகுதியில் பாகிஸ்தானில் அமெரிக்க படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாக்குதல் நடத்திய அதே நாளான இன்று அமெரிக்காவில் கார்களை கொண்டு பயங்கர தாக்குதலை நடத்தப்போவதாக அல் குவைதா தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

ஆனால் இதை நம்பாமலும் இருக்க முடியாது  உறுதிப்படுத்தவும் முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இருந்தாலும் மக்கள் பீதி அடையாமல் அமைதி காக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடலோர பகுதிகளிலும் தீவிரவாதிகள் எந்த ரூபத்திலும் நுழைந்து விடாதபடி அமெரிக்க பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வானில் பறக்கும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எந்த விதத்திலும் எந்த தாக்குதல் நடந்தாலும் அதை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்