முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிசாவில் வெள்ளம்: 1.5 லட்சம் மக்கள் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புவனேஸ்வரம்,செப்.11 - ஒரிசாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 1.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 150 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாலசோர், கேந்திரப்பாரா, ஜஜ்பூர் மாவட்டங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. ஹிராகுட் அணையில் இருந்து 10.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 630 அடியாகும். அணையில் 54 கதவுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 13 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. 

அரசு ஏற்கனவே நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது. பல இடங்களில் சமுதாய சமையலறைகள் தொடங்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயாரித்து அளிக்கப்படுகின்றன. வெள்ள நீர் சூழ்ந்த கிராமங்களில் சிக்கிய மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. ஒரிசா மாநில இடர் மேலாண்மை செயல்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்