முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானி ரதயாத்திரைக்கு பா.ஜ முழு ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.11 - ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தப்படும் என்று எல்.கே. அத்வானி அறிவித்திருப்பதற்கு பாரதிய ஜனதா முழு ஆதரவு அளித்துள்ளது. பாரதிய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி ஒரு செயல் வீரர். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள சேவையை அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மறக்கமாட்டார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது மட்டுமல்லாது மக்கள் உணர்வை அறிந்து அவர் பல முறை ரத யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை சென்றுள்ளார். தற்போது ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய போராட்டம் மத்தியில் பிரதமர் மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கதி கலங்கச் செய்துவிட்டது. இதற்கு காரணம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வானது ஊழலுக்கு எதிராக கிளம்பியிருப்பதுதான். இதை அறிந்த எல்.கே. அத்வானி ஊழலுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ரதயாத்திரை நடத்தப்படும் என்று தற்போது அறிவித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா கட்சியில் முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு தலைவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி தலைவர்களாக விளங்குவதோடு கட்சியின் பிரதமர் வேட்பாளராக தங்களை நினைத்துக்கொண்டியிருக்கிறார்கள். அதனால் மூத்த தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானியின் ரதயாத்திரையில் இருந்து சுஷ்மாவும், அருண்ஜெட்லியும் ஒதுங்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இதை நிராகரிக்கும் வகையில் அத்வானியின் ரத யாத்திரைக்கு கட்சி ஒருமித்த ஆதரவு அளித்துள்ளது என்று அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுஷ்மா சுவராஜ், பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த சுஷ்மா, ரதயாத்திரையையும் பிரதமர் வேட்பாளரையும் ஒப்பிடாதீர்கள். பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் அத்வானியின் ரத யாத்திரை தீர்மானத்தை கட்சி தலைவர் நிதீன் கட்காரி கொண்டுவந்தார். அந்த தீர்மானத்திற்கு ஏகமனதாக ஆதரவு அளிக்கப்பட்டது என்றும் சுஷ்மா கூறினார். அந்த பேட்டியின் போது ஜெட்லியும் உடன் இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எல்.கே. அத்வானி கடுமையாக கூறியிருந்தார். அதனையடுத்து ரதயாத்திரையை அத்வானி அறிவித்திருப்பது இடைத்தேர்தல் ஒருவேளை நடக்கலாம் என்றும் அதற்காக இந்த ரத யாத்திரையை ஒரு பிரசாரமாக அத்வானி பயன்படுத்தலாம் என்றும் பேசப்படுகிறது. மேலும் 83 வயதாகும் அத்வானி,ரத யாத்திரை செல்லும் அளவுக்கு இன்னும் உடல் ஆரோக்கியமாக இருக்கிறார். அந்த வகையில் நாம் மகிழ்ச்சி அடைவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்