முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் 79 வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.- 27 - பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேற்று 78 வயது முடிந்து 79 வது வயது பிறந்தது. 6 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நேற்று நாடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது பிறந்த நாளை விமானத்திலேயே கொண்டாடினார்.  விமானத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமருக்கு அரசு அதிகாரிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பிரதமர் வெளிநாட்டு பயணத்தின் போது தனது பிறந்த நாளை கொண்டாடுவது இதுவே 4 வது முறையாகும். கடந்த 2004 ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போதும் அவர் விமானத்தில் பிறந்த நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.  மன்மோகன்சிங் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1932 ல் சர்தார் குருமுக்சிங், அம்ரித்கவுர் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். ஆனால் அவரது உண்மையான பிறந்த நாள் எது என்று தெரியவில்லை. அவரை பள்ளியில் சேர்த்த போது செப்டம்பர் 26 என்று பதிவு செய்தனர். அன்று முதல் மன்மோகன்சிங் செப்டம்பர் 26 ஐ பிறந்த நாளாக கொண்டாடி வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்