முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி விவகாரம் சிதம்பரம் ராஜினாமா முடிவு இன்று காங்கிரஸ் பரிசீலனை?

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,செப். - 28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அதை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பது குறித்து காங்கிரஸ் இன்று பரிசீலனை செய்யலாம் என்று தெரிகிறது.  தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பொது ஏலம் விடாமல் முன்வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் முறையில் விட வேண்டும் என்று ஆ.ராசாவுக்கு அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வற்புறுத்திருந்தால் இந்த அளவுக்கு நஷ்டமும் ஊழலும் நடந்திருக்காது என்று பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய நிதி அமைச்சகமானது ரகசிய குறிப்பு எழுதியுள்ளது. இதனையொட்டி நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் ராஜினாமா வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சோனியா காந்தியை சிதம்பரம் சந்தித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரதமர் மன்மோன் சிங் நேற்று இரவுதான் டெல்லி திரும்பியுள்ளார். அதனால் இன்று காலையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர்கள் சிதம்பரம் ராஜினாமா குறித்து ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. சிதம்பரம் விவகாரத்தில் காங்கிரஸ் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும். சிதம்பரம் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதிலும் காங்கிரஸ உறுதியாக இருப்பதாக தெரிகிறது. 2 ஜி ஸ்பெக்டரம் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி  வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயாராக இருப்பதோடு ப.சிதம்பரத்திற்கு முழு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. சுப்பிமணியசுவாமி தொடர்ந்து வழக்கு விசாரணை நேற்று மீண்டும் வந்தது. இதற்கிடையில் சுப்பிரமணியசுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீது சுப்ரீம்கோர்ட்டு நடவடிக்கை எடுக்க முடியாது. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் கீழ் கோர்ட்டுதான் தேவைப்பட்டால் அழைக்கலாம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. டெல்லியில் சோனியா காந்தியை ப.சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் தனித்தனியாக சந்தித்து பேசினர். சோனியாவுடன் சிதம்பரம் அரைமணி நேரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு வரும்படி ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சிதம்பரத்தை சோனியா கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. பிரதமர் மன்மோகன் சிங்கை சோனியா சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர்தான் சிதம்பரத்தின் ராஜினாமா முடிவு குறித்து நடவடிக்கை பற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்