முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: மேற்கு இந்தியத் தீவு அணியில் கெய்ல் மீண்டும் புறக்கணிப்பு

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, அக். - 12 - வங்காளதேசத்துக்கு எதிராக நடக்க இருக்கும் 20 ஓவர் போட்டிக்கான மேற்கு இந்தியத் தீவு அணியில் அதிரடி துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். இது பற்றிய விபரம் வரு மாறு -  மேற்கு இந்தியத் தீவுகள் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் மே ற் கொண்டு சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது.  இதில் மேற்கு இந்தியத் தீவு அணியில் கெய்ல் மீண்டும் புறக்கணிக்கப் பட்டார். உலகக் கோப்பையில் மேற்கு இந்திய அணி படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது. இந்தப் போட்டியில் அதிரடி பேட்ஸ்மே ன்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதனால், மேற்கு இந்திய கிரிக்கெட் போர்டுக்கும், கெய்லுக்கும் மோதல் ஏற்பட்டது. மே.இ.தீவு அணியில் சோபிக்காத கெய்ல் இந்தி யாவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ் சர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி முத்திரை பதித்தார்.  இதனால், அவர் மீது மேற்கு இந்தியத் தீவு கிரிக்கெட் போர்டு அதிருப் தி அடைந்தது. அவரை அணியில் இருந்து நீக்கியது. இந்த நிலையில், வங்காளதேச சுற்றுப் பயணத்திலும் கெய்ல் புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கும், கிரிக்கெட் போர்டுக்கும் இடையேயான மோதல் முற்றுகிறது.  32 வயதாகும் கெய்ல், மே.இ.தீவு அணியில் 91 டெஸ்ட் போட்டி, 228 ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக் கிறார். இதில் 2 முறை டிரிபிள் செஞ்சுரி அடுத்துள்ளது குறிப்பிடத்தக் கது.  20 ஓவர் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது, 6 போட்டிகளில் 257 ரன்கள் எடுத்து அதிக ரன் குவித்த 2 -வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது நினைவு கூறத்தக்கது.  இதே போல் மற்றொரு மே.இ.தீவு வீரரான பிராவோவும் வங்காள தேச சுற்றுப் பயணத்தில் இடம் பெறவில்லை. மூத்த வீரர்களுக்கு பதி ல் புதிய இளம் வீரர்களை களம் இறக்க திட்டமிட்டு இருப்பதாக பயிற் சியாளர் ஒட்டிங் கிப்சன் தெரிவித்தார்.  அவர் மேலும் கூறியதாவது  - அணியில் மூத்த வீரர்களை மட்டும் வை த்துக் கொண்டு விளையாட முடியாது. புதிய இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என கலந்து தான் அணியை உருவாக்க வேண்டும். 

இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத் திக் கொண்டுள்ளார்கள். வரும் காலத்தில் இளம் வீரர்களைத் கொண்டதாக மே.இ.தீவு அணி இருக்கும். இளம் வீரர்களால் பலம் மிக்க அணியை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்