முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசம்பாவிதம் நடக்காததால் ஊடகங்கள் ஏமாற்றம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

ராமநாதபுரம் நவ1 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர்குருபுஜையின்போது மாவட்டம் முழுவதும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காததால், ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா அதை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றுபரப்பலாமா என்று எதிர்பார்த்து காத்திருந்த திமுக ஆதரவு ஊடகங்கள் ஏமாற்றம் அடைந்தன.

        ராமநாதபுரம் மாவட்டம் பசம்பொன்னில் பசும்பொன் முது;துராமலிங்கதேவர் குருைபுஜை கடந்த 30 ம் தேதி நடைபெற்றது. இந்த குருபுஜையின்போது வழக்கமாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே ஏதாவது கல்வீச்சு. தாக்குதல் அடிதடி போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். மேலும் கடந்த ஓரிரு மாதங்களு;ககு முன்பு பரமக்குடியில் கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிசூடு போன்ற அசம்பாவிதம் நடைபெற்றதால். தேவர்குருபுஜையின்போதும் அதுபோன்ற ஒருசம்பவம் நிகழலாம் எனறு எதிர்பார்க்கப்பட்டது. 

             அப்படி ஏதாவது கலவரம்,தகராறு கல்வீச்சு போன்ற ஏதாவது நடந்தால் அதை வைத்து சட்டம் ஒழுங்கு சீரழி;ந்துவிட்டது. அஇஅதிமுக ஆட்சி சரியில்லை என்று பரப்பிவிட திட்டமிட்ட திமுக ஆதரவு தொலைக்காட்சி (சன்டிவி) இதுவரை இல்லாத அளவில் பசும்பொன்னை சுற்றிலும் 25 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், கேமராமேன்கள் வாகனங்களுடன் நிறுத்தப்பட்டு சுற்றிச்சுற்றி வந்தனர். அப்படி அவர்கள் ஏதாவது அசம்பாவிதத்தை படம்பிடித்தால் அதை உடனடியாக ஒளிபரப்பவசதியாக ஓ.பி.வேன் நிறுத்தப்பட்டிருந்தது. 

              ஆனால் அஇஅதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் வழக்கத்துக்குமாறாக அமைதியாக, சின்னஞ்சிறு கல்வீச்சுகூட நடக்காமல் தேவர்குருபுஜை நடைபெற்றது. திமுக ஆதரவு ஊடகங்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிப்போனது. நாள் முழுவதும் அந்தபகுதி கிராமங்களை சுற்றிச்சுற்றி வந்த திமுக ஆதரவு ஊடக கேமராமேன்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மொத்தத்தில் அஇஅதிமுக ஆட்சி என்றால், செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று எண்ணத்தை மீண்டும் நிரூபித்துள்ளது தேவர்குருபுஜை பாதுகாப்பு ஏற்பாடுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்