முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனுவை திரும்பப் பெற்றார் லலித் மோடி

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ.6 - பாஸ்போர்ட் வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவை திரும்பப் பெற்றார் ஐ.பி.எல். முன்னாள் ஆணையர் லலித்மோடி. இந்த வழக்கில் தீர்ப்பாயம் கடந்த 31 ம் தேதி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்தே அவர் தனது மனுவை திரும்பப் பெற்றார். ஐ.பி.எல். அமைப்பின் முன்னாள் ஆணையாளர் லலித்மோடி மீது ஐ.பி.எல். போட்டியில் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மும்பையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் மோடியின் பாஸ்போர்ட்டை கடந்த மார்ச் 3 ம் தேதி திரும்பப் பெற்றது. 

இந்த வழக்கை விரைவாக விசாரிக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2 ம் தேதி மோடி சார்பில் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. அதை கேட்ட நீதிபதி, உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்பு அது தொடர்பாக மனுவை தாக்கல் செய்யுமாறு கூறினார். மோடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் ஆஜராகி வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரும் தங்களின் மனு கடந்த ஆகஸ்டில் இருந்து தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாகவும், இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சங்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மோடி சார்பில் ஆஜரான ராகேஷ் ஆஜராகி தங்களுடைய மனுவின் மீது தீர்ப்பாயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதனால் மனுவை திரும்பப் பெற்று கொள்கிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து அதற்கு நீதிபதி அனுமதியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்