முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசியாவில் பாகிஸ்தான் கூட்டாளி நாடாம்: ரஷ்யா கூறுகிறது

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

பீட்டர்ஸ் பர்க்,நவ.- 9 - தெற்காசியாவில் பாகிஸ்தான் மிகவும் முக்கியமான கூட்டாளி நாடு என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உறவு மேம்பட்டு பலப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பாகிஸ்தானுடனான உறவை அமெரிக்கா முறிக்கவில்லை. இந்தநிலையில் பாகிஸ்தானில் பின்லேடன் ஒளிந்திருந்த விஷயம் அமெரிக்காவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இருநாடுகளுக்கிடையே உறவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பகைத்துக்கொண்டால் இந்தியாவுக்கு எதிராக செயல்பட மற்றொரு பெரிய வல்லரசு நாட்டின் ஆதரவு வேண்டுமே என்று கருதும் பாகிஸ்தான், சீனாவின் நல்லாட்சியோடு ரஷயாவுடன் உறவு கொண்டாட பாகிஸ்தான் ஆரம்பித்துவிட்டது. இந்தநிலையில் ரஷ்யா சென்ற பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பீட்டர்ஸ் பர்க் நகரில் ரஷ்ய பிரதமர் விலாடிமீர் புட்டீனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்லாது பாகிஸ்தானும் ரஷ்யாவின் மிகவும் முக்கிய நெருங்கிய நாடு என்று பிரதமர் விலாடிமீர் புட்டீன் கூறியதாக இதார் டாஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பீட்டர்ஸ் பர்க் நாட்டில் ஷாங்கை கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் கிலானி அங்கு சென்றிருந்தார். அப்போது புட்டீனை கிலானி சந்தித்து பேசினார். தஜிகிஸ்தான் கிர்ஜிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் கொண்டு வருவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானும் கிர்ஜிஸ்தானும் அணுமின்சாரம் உற்பத்தியில் சிறந்து விளங்குகின்றன. அதனால் அங்கு மின்சாரம் உபரியாக இருக்கிறது. தெற்காசியாவில் இந்தியாதான் ரஷ்யாவின் மிகவும் முக்கிய நட்பு நாடாக இன்னும் இருக்கிறது. தற்போது அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய உறவு வைத்து வருவதால் ரஷ்யாவின் போக்கில் மாற்றம் ஏற்படலாம். ரஷ்யாவுடன நெருக்கமாக உறவு வைத்துக்கொள்ளும்படி பாகிஸ்தானுக்கு சீனா அவ்வப்போது அறிவுரை கூறி வரலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்