முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல கங்குலி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ. 11 - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல் தனது சுயசரி தை புத்தகத்தில் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி குறித்து சரமாரி புகார் கூறியிருந்தார். இது குறித்து கங்குலியிடம் கேட்ட போது, அவர் அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். இது பற்றிய விபரம் வருமாறு - 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், இவர் 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போது கேப்டனாக கங்குலி இருந்தார். 

இந்த நிலையில், கிரேக் சேப்பல் பீர்ஸ் போக்கஸ் என்ற பெயரில் சுய சரிதை புத்தகம் ஒன்று எழுதி உள்ளார். அதில் கங்குலி ஆட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர். இதனால் தான் பல நேரங்களில் அவுட் ஆகி விடுவார். 

அவர் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தார். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் மைதானத்தில் ஆடும் போது, சில நேரங்களில் அவரை பயம் தொற்றிக்கொள்ளும். அப்போது சரியாக ஆட மாட் டார் என் று கூறியிருந்தார். 

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயா ன முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் இம்மாதம் 6 -ம் தேதி முதல் 9 -ம் தேதி வரை நடந்தது. 

அப்போது நிருபர்கள் கங்குலியைச் சந்தித்து முன்னாள் பயிற்சியாளரான சேப்பல், தனது புத்தகத்தில் உங்களை விமர்சித்து இருக்கிறாரே, என்று கேட்ட போது, அவர் அளித்த பதில் வருமாறு - 

சேப்பல் அவரது சுயசரிதை புத்தகத்தில், என்னைப் பற்றி கூறிய குற்றச் சாட்டுகளுக்கு, நான் பதில் அளிக்க விரும்பவில்லை. நான் இதுவரை அவர் எழுதிய பீர்ஸ் போக்கஸ் புத்தகத்தை பார்க்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்