முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிஸ் மாஸ்டர்ஸ்: பொபண்ணா - குரேஷி சாம்பியன்

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பாரிஸ், நவ. 16 - பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜ ர் பெடரர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். அவர் உலக முன்னாள் நம்பர் -1 வீரராவார். 

ஆடவருக்கான ஏ.டி.பி சார்பிலான சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரில் கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வந் தது. இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களத்தில் குதித்தனர். கடந்த இரண்டு வார காலமாக அமோகமாக நடந்த இந்த ப் போட்டி நேற்று முன் தினத்துடன் முடிவுக்கு வந்தது. 

இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் தரமான ஆட்டத் தை வெளிப்படுத்தி தங்களது திறனை நிரூபித்தனர். முன்னணி வீரர்க ளின் ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரட் ஜோங்கோவும், சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடர ரும், பலப்பரிட்சை நடத்தினர். 

2 செட்டுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரரான பெடரர் அபாரமாக ஆடினார். இறுதியில் அவர் 6- 1, 7 - 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தனது வசமாக் கினார். இது அவருக்கு 18 - வது மாஸ்டர்ஸ் பட்டமாகும். 

இதற்கு முன்னர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால் 19 மாஸ் டர்ஸ் பட்டம் வென்று சாதனை படைத்தது நினைவு கூறத்தக்கது. இவ ரும் உலக முன்னாள் நம்பர் - 1 வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் இரட்டையர் பட்டத்தை இந்தியாவின் ரோகன் பொபண்ணா மற்றும் பாகிஸ்தானின் அய் சம் அல் ஹக் குரேஷி ஜோடி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

இறுதிச் சுற்றில் ரோகன் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூலியன் பெனட்டா மற்றும் நிகோலஸ் மகத் இணையும் சாம்பியன் பட்டத்திற்காக மோதின. 

இந்தப் போட்டியில் பொபண்ணா மற்றும் குரேஷி ஜோடி, அபார மாக ஆடி 6 - 2, 6 - 4 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டம் சுமார் 50 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 

நடப்பு சீசனில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஜோடி பெறும் 3 -வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே ஸ்டாக்ஹோம் ஓபன் பட்டத்தையும், ஜெர்மி வெப்பர் ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்கள் என்பது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்